eye opener
வசந்திக்கு காலையிலிருந்து ஒரே தலை வலி , ஏகப்பட்ட வேலை , மனதில் ஆயிரம் கவலைகளுடன் வேலை செய்து கொண்டிருந்தாள் . ஆபீசில் இன்று ஒரு முக்கியமான பிரெசெண்ட்டேஷேன் செய்தாக வேண்டும் , நேற்று இரவு கண் முழித்து வேலை செய்ததில் வந்த தலை வலி , குழந்தைகளுக்கு எக்சம்ஸ் வேறு , என்ன செய்வது ,அவர்களை படிப்பதற்கு எழுப்ப வேண்டும் , இல்லைஎன்றாலும் , வேலை, எழுந்திருக்க வேண்டியதுதான் , ஒவ்வொரு வேலையாக செய்யும் போதும் மனது மிகவும் வேதனை பட்டது .
ஒரு நாளானும் யாரேனும் தட்டில் சாப்பாடு போட்டு கையில் தர மாட்டர்களா என்று. வேகமாக வேலையை முடித்து விட்டு, குழந்தைகளை கிளப்பி , ஹோம் வொர்க் செக் செய்து விட்டு , ஸ்கூல் வேனில் ஏற்றி விட்டு விட்டு ஆபீஸ் கிளம்பினாள் மனதில் பாரத்துடன் .
அவளது கணவன் ஊரில் இல்லை , எல்லா வேலையையும் தனியாக செய்யும் பொது மனது தளர்ந்து போகிறது , போகும் வழியில் கிரெடிட் கார்டு பேமென்ட் செய்ய வேண்டும் , நேற்று இரவு ஆபீஸ் வேலையில் பிஸியாக இருந்ததால் இது மறந்து போய்விட்டது , காரில் வேறு பெட்ரோல் இல்லை , ஒரே எரிச்சலாக வந்தது , ஹஸ்பெண்ட் ஊரில் இருந்தாலும் எந்த வேலையும் பெரிதாக செய்யப் போவதில்லை , எப்போதும் லேப்டாப்பும் கையுமாகவே இருப்பான் , எந்த ஒரு கேள்விக்கும் ஒரு சொல்லில் பதில் சொல்வான் , அவனுக்கு எதற்கும் டைம் கிடையாது , அவனுடைய வேலையின் நிமித்தம் வேறு ஊருக்கு வந்திருக்கிறார்கள் .
இதை எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பெட்ரோல் பங்க் வந்தது, பெட்ரோல் நிரப்பிக்கொண்டு காரில் வேகமாக ஆபீஸ் போனாள் , அங்கு நுழைந்தவுடன் தான் ஞாபாகம் வந்தது , பிரேக்ப்பாஸ்ட் சாப்பிடாதது . என்ன வாழ்க்கை இது என்று நினைக்கும்போதே அழுகையாக வந்தது , லிப் ட் வொர்க் செய்ய வில்லை , மெதுவாக படி ஏறினாள் , ஒரே மூச்சிறைப்பு, இதற்காக டாக்டரிடம் செல்வதற்கு வீக் என்ட் வரைக்கும் வெயிட் செய்ய வேண்டும் , எதற்காக வாழவேண்டும் என்று புரியவில்லை , கோவம் கோவமாக வந்தது ,
ரெஸ்ட் ரூமிற்கு சென்று முகத்தை சரி செய்து கொண்டு cabin இல் வந்து அமர்ந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ரோசியைக் காணவில்லை , , ரோ சியும் வசந்தியும் பெஸ்ட் பிரென்ட்ஸ் , ரோசி ஆபிசுக்கு கரெக்ட் டைமிற்கு வருவாள் , மிகவும் புத்திசாலி , எப்போதுமே சிரித்த முகம் ,
வசந்தி நினைத்துப் பார்த்தாள் , ரோசி இருந்தால் அவளிடம் மனது விட்டு பேசலாம் என்று , எதையும் யோசிக்க டைம் இல்லை , லஞ்ச் ப்ரேக்கில் ரோசியின் நம்பர் ட்ரை செய்தாள் , கிடைக்கவில்லை , ஈவ்னிங் ஆபீஸ் விட்டு செல்லும்போது பார்த்து விட்டுச் செல்லவேண்டும் என நினைத்தாள் , ரோசிக்குக் கல்யாணம் ஆகிவிட்டது , ஆனால் அவள் வசந்தியிடம் எந்த விஷையத்தையும் ஷேர் செய்ததில்லை , வசந்தியும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய ப்ரோப்ளேத்தை அவளிடம் சொல்வாள் .
ஈவினிங் வேலை முடிந்ததும் ரோசி வீட்டின் அட்ரெஸ் சை ஆபீஸ் பாயிடம் செக் செய்து விட்டு , ரோசி வீட்டிற்குக் கிளம்பினாள் , ரோசி இருந்தது ஒரு அழகான அபார்ட்மென்ட் , வாசலில் காலிங் பெல் அடித்தவுடன் ரோசி கதவை திறந்தாள் , வசந்தியை பார்த்ததும் மிகுந்த ஆச்சரியம் , உள்ளே நுழைந்தாள் ,
வீடு மிகவும் நீட்டாக இருந்தது , ரோசி வேலைக்கு ஆள் இல்லை என்று சொன்னதாக ஞா பாகம் , "குழந்தைகள் எங்கே ?"என்றாள் வசந்தி ,
"என்னுடைய பெண்ணிற்கு இன்று first periods அதனால் லீவ் போட்டேன் வசந்தி" என்றாள் , :" தட்ஸ் எ வெரி குட் நியூஸ்" என்று சொன்னாள் வசந்தி,
"அவளைக் கூப்பிடு , சாரி நான் ஒரு கிப்டும் வாங்க வில்லை , எனக்கு தெரியாது" என்றாள் , ரோசி ,"அவளைக் கூப்பிட முடியாது, நாம் தான் உள்ளே போய்ப் பார்க்க வேண்டும் " என்றாள் .
உள்ளே போனால் மிக அழகான ஒரு பெண் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்ததாள் , பக்கத்தில் வீ ல் சேர் , வசந்திக்கு வார்த்தையே வரவில்லை ," உன் பையன் எங்கே?" என்று கேட்டாள் , அவன் வயலின் கிளாஸ் போயிருக்கிறான் , இப்போது வருவான்" என்றாள் , , அதற்குள் காலிங் பெல் அடித்தது , வெளியில் சென்று பார்த்தார்கள் ரோசியும் வசந்தியும் .
ஆட்டோ மேனுடன் ஒரு பையன் கூலிங் கிளாசுடன்
நின்று கொண்டிருந்ததான் , வசந்திக்கு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது , இரண்டு குழந்தைகளும் physically challenged , ஆனால் ரோசியின் முகத்தில் எப்போதுமே புன்னகைதான் ,
வசந்திக்கு மனது மிகவும் வருத்தமாக இருந்தது , எப்போதும் தன்னுடைய ப்ராப்ளேம்சைப் பொறுமையாக காது கொடுத்து கேட்கும் ரோசிக்கு இவ்வளவு பெரிய பிரச்சிநையா என்று நினைத்தாள் , ரோசி இவளுக்கு டீ கலப்பதற்குள்
குழந்தைகள் இருவருக்கும் நூறாயிரம் ஹெல்ப் செய்ய வேண்டியிருந்தது .
மனதில் தன்னுடைய வேலைகளையும் , குழந்தைகளுடன் எரிந்து விழுவதையும் நினைத்து பார்த்தாள் , மனது வேதனைப் பட்டது , ரோசி
நினைவாகவே வீடு திரும்பினாள் , அவளுடைய பையன் வருண் "அம்மா , நான் இப்போ உன்னோட பேசலாமா இல்லை நீ பிஸியா" என்றான் .
"அம்மா எப்போதுமே நீ கூப்பிடும்போது பிஸி இல்லை கண்ணா "என்றாள்
வருணுக்கு ஒன்றும் புரியவில்லை , ஆனால் வசந்திக்கு வாழ்க்கை நன்றாகப்
புரிந்தது.

No comments:
Post a Comment