Saturday, September 6, 2014

சுவரோடே சொல்லி அழு 
ஜானகி நிறைய நேரம் நடந்டதுக்கப்புறம் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் நின்றாள் பக்கத்தில் எதுத்தவீட்டு  கோகிலா மாதிரி இருந்தது , இவளை பார்த்ததும் அவள் கையசைத்தாள் , ஜானகிக்கு நடப்பதற்கு புது தெம்பு வந்தது ," எங்க போயிட்டு வரேன்னு கேட்டாள்.  , கோகிலாவிற்கும் அழுகை வந்தது  மணி ஆர்டர் பண்ணிட்டு வரேன் மாமி என்றாள் , நானும் கார்த்தாலேருந்து   உங்காத்து   கொல்லைபக்கம் பார்த்துண்டே இருந்தேன் நீங்கள் தென்பட ஂமாட்டேளோன்னு
     உங்களை காணும் , எனக்கும் எங்காத்து  மாமாக்கும் ஒரே சண்டை , இந்த மாசம் எங்களுக்கு ஏகப்பட்ட செலவு ஆனாலும் என் நாத்தனார் ஊர்லேருந்து பணம் கேட்டவுடன் மணி ஆர்டர் பண்ணுவேன்னு  அடம் பிடிக்கிறார்,   நாளைக்கி வைதேஹிக்கு பீஸ் கட்டணும் , நான் என்ன பண்ணறதுன்னே தெரியலை மாமி என்றாள்.ஜானகிக்கு இதை கேட்டவுடன் மிகுந்த  வருத்தம், தனக்குதான் தலை போற பிரச்சனைனா இவளுக்கு அதுக்கு மேல இருக்கே என்று வருத்தம் , அவள் உடனே கோகிலாவிடம் சொன்னாள்  ரொம்ப மூச்சு வாங்கறது கொஞ்சம் உக்கார்ந்து பேசலாமே என்றாள். இருவரும் மாவு மிஷின்   வாசலில் உட்கார்ந்தார்கள் ,ரொம்ப வருத்தமா இருக்கு கோகிலா உன்னை நினைத்தால் என்று சொன்னாள் அவர்கள் இருவருக்கும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது ஆறுதல்  .அது கூட இருவர் வீட்டில் இருப்பவர்களுக்கு  பிடிப்பதில்லை வீட்டு வேலை கேட்டு போய்விடுமோ என்ற பயம் , கோகிலா சொன்னாள் மாமி என்னோட பிரச்சனையை உங்களோட ஷேர் பண்ணிண்டா கொஞ்சம் நிம்மதி தீர்வு கிடைக்காது இருந்தாலும் ஒரு திருப்தி  ஜானகி சிரித்து விட்டு நம்பளால் ஒன்றையும் நம்மாத்திலே மாத்த  முடியாது, ஆனா நாம்ப பேசறது எனக்கும் பிடிச்சிருக்குன்னு   சொன்னாள் "ஏன் மாமி உங்கள் மூஞ்சி வாடியிருக்குன்னு  கேட்டாள் கோகிலா ஜானகிக்கு ஒரே சந்தோஷம் ", "  இவர் ஒரு ஒண்ணா  நம்பர் முசுடுன்னு உனக்கு தெரியும் கார்த்தால அவசரத்துலே தட்டுலே இட்லி போட்டுட்டு தொட்டுக்க ஒண்ணும்  போடாம விட்டுட்டேன் அதற்காக கோச்சுண்டு சாப்பிடாம எழுந்து போய்விட்டார் அவர் ஆபீஸ் கு நடந்து போய் லஞ்ச் கொடுத்துட்டு வந்தேன் அப்போ  கூட என்னை நிமிர்ந்து பார்க்கலை    என்றாள். கோகிலாவிற்கு மிகவும் வருத்தம் "என்ன மாமி இது உங்களை மாதிரி பொறுமை சாலியை பார்க்க முடியாது மாமா ஏன் இப்பிடி 

கோவிசுக்கரார்னு  தெரியலையே " அப்படின்னு இருவரும்  வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் நினைத்தவாறு வேகமாக நடந்தனர் , ஆனால் மனதில் ஒரு தெம்புடன்தங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் பொறுமையாக கேட்டுக்கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்பதை நினைத்து.

No comments:

Post a Comment