Sunday, September 21, 2014

eye opener


வசந்திக்கு காலையிலிருந்து ஒரே தலை வலி , ஏகப்பட்ட வேலை , மனதில் ஆயிரம் கவலைகளுடன் வேலை செய்து கொண்டிருந்தாள் . ஆபீசில் இன்று ஒரு முக்கியமான  பிரெசெண்ட்டேஷேன்  செய்தாக வேண்டும் , நேற்று  இரவு கண் முழித்து வேலை செய்ததில் வந்த தலை வலி , குழந்தைகளுக்கு எக்சம்ஸ்  வேறு , என்ன செய்வது ,அவர்களை படிப்பதற்கு எழுப்ப வேண்டும் , இல்லைஎன்றாலும் , வேலை, எழுந்திருக்க வேண்டியதுதான் , ஒவ்வொரு வேலையாக செய்யும் போதும் மனது மிகவும் வேதனை பட்டது .

 ஒரு நாளானும் யாரேனும் தட்டில் சாப்பாடு போட்டு கையில் தர மாட்டர்களா  என்று.  வேகமாக வேலையை முடித்து விட்டு, குழந்தைகளை கிளப்பி , ஹோம் வொர்க் செக் செய்து விட்டு , ஸ்கூல் வேனில் ஏற்றி  விட்டு விட்டு ஆபீஸ் கிளம்பினாள்  மனதில் பாரத்துடன் .

 அவளது கணவன் ஊரில் இல்லை , எல்லா வேலையையும் தனியாக செய்யும் பொது மனது தளர்ந்து போகிறது , போகும் வழியில் கிரெடிட் கார்டு பேமென்ட்  செய்ய வேண்டும் , நேற்று  இரவு ஆபீஸ்   வேலையில் பிஸியாக இருந்ததால் இது மறந்து போய்விட்டது , காரில் வேறு பெட்ரோல் இல்லை , ஒரே எரிச்சலாக வந்தது , ஹஸ்பெண்ட்  ஊரில் இருந்தாலும் எந்த வேலையும் பெரிதாக செய்யப்  போவதில்லை , எப்போதும்  லேப்டாப்பும் கையுமாகவே இருப்பான் , எந்த ஒரு கேள்விக்கும் ஒரு சொல்லில் பதில் சொல்வான் , அவனுக்கு எதற்கும் டைம் கிடையாது , அவனுடைய வேலையின் நிமித்தம் வேறு ஊருக்கு வந்திருக்கிறார்கள் .

இதை எல்லாம் யோசித்துக்  கொண்டிருக்கும் போதே பெட்ரோல் பங்க் வந்தது, பெட்ரோல் நிரப்பிக்கொண்டு காரில் வேகமாக ஆபீஸ் போனாள் , அங்கு  நுழைந்தவுடன் தான்  ஞாபாகம் வந்தது , பிரேக்ப்பாஸ்ட்  சாப்பிடாதது . என்ன வாழ்க்கை இது  என்று  நினைக்கும்போதே அழுகையாக வந்தது , லிப் ட்  வொர்க் செய்ய வில்லை , மெதுவாக படி ஏறினாள் , ஒரே மூச்சிறைப்பு, இதற்காக டாக்டரிடம் செல்வதற்கு   வீக்  என்ட்  வரைக்கும் வெயிட் செய்ய வேண்டும் , எதற்காக வாழவேண்டும் என்று புரியவில்லை , கோவம் கோவமாக வந்தது ,

ரெஸ்ட்  ரூமிற்கு சென்று முகத்தை சரி செய்து கொண்டு cabin இல் வந்து அமர்ந்தாள். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ரோசியைக்   காணவில்லை , , ரோ சியும் வசந்தியும் பெஸ்ட்  பிரென்ட்ஸ் , ரோசி ஆபிசுக்கு  கரெக்ட் டைமிற்கு வருவாள்  , மிகவும் புத்திசாலி , எப்போதுமே சிரித்த முகம் ,


வசந்தி நினைத்துப்  பார்த்தாள் , ரோசி இருந்தால் அவளிடம் மனது விட்டு பேசலாம் என்று , எதையும் யோசிக்க டைம் இல்லை , லஞ்ச் ப்ரேக்கில் ரோசியின்    நம்பர் ட்ரை செய்தாள் , கிடைக்கவில்லை , ஈவ்னிங் ஆபீஸ் விட்டு செல்லும்போது  பார்த்து விட்டுச்  செல்லவேண்டும் என நினைத்தாள் , ரோசிக்குக்  கல்யாணம் ஆகிவிட்டது , ஆனால்  அவள் வசந்தியிடம் எந்த விஷையத்தையும்  ஷேர்  செய்ததில்லை , வசந்தியும் அதைப்பற்றிக்  கவலைப்படாமல் தன்னுடைய ப்ரோப்ளேத்தை அவளிடம் சொல்வாள் .

ஈவினிங் வேலை முடிந்ததும் ரோசி வீட்டின் அட்ரெஸ் சை  ஆபீஸ்  பாயிடம் செக்  செய்து விட்டு , ரோசி வீட்டிற்குக்  கிளம்பினாள் , ரோசி இருந்தது  ஒரு அழகான அபார்ட்மென்ட் , வாசலில் காலிங் பெல்  அடித்தவுடன்  ரோசி கதவை திறந்தாள் , வசந்தியை பார்த்ததும் மிகுந்த ஆச்சரியம் ,  உள்ளே நுழைந்தாள் ,

வீடு மிகவும் நீட்டாக இருந்தது , ரோசி வேலைக்கு ஆள் இல்லை என்று சொன்னதாக ஞா பாகம் , "குழந்தைகள் எங்கே ?"என்றாள்  வசந்தி ,

"என்னுடைய பெண்ணிற்கு இன்று  first  periods  அதனால் லீவ் போட்டேன் வசந்தி" என்றாள் ,  :" தட்ஸ் எ வெரி குட் நியூஸ்" என்று சொன்னாள்   வசந்தி,

"அவளைக்  கூப்பிடு , சாரி நான் ஒரு கிப்டும் வாங்க வில்லை , எனக்கு தெரியாது" என்றாள் , ரோசி ,"அவளைக்  கூப்பிட முடியாது, நாம் தான் உள்ளே போய்ப்   பார்க்க வேண்டும் " என்றாள் .

 உள்ளே போனால் மிக அழகான ஒரு பெண் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்ததாள் , பக்கத்தில் வீ ல் சேர்  , வசந்திக்கு வார்த்தையே வரவில்லை ," உன் பையன் எங்கே?" என்று  கேட்டாள்  , அவன் வயலின்  கிளாஸ் போயிருக்கிறான் , இப்போது வருவான்" என்றாள் , , அதற்குள் காலிங் பெல் அடித்தது , வெளியில் சென்று  பார்த்தார்கள்  ரோசியும் வசந்தியும் .

 ஆட்டோ மேனுடன் ஒரு பையன் கூலிங் கிளாசுடன்
 நின்று கொண்டிருந்ததான் , வசந்திக்கு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது , இரண்டு குழந்தைகளும் physically  challenged , ஆனால்  ரோசியின்  முகத்தில் எப்போதுமே புன்னகைதான் ,

வசந்திக்கு மனது மிகவும் வருத்தமாக இருந்தது , எப்போதும் தன்னுடைய ப்ராப்ளேம்சைப்  பொறுமையாக காது கொடுத்து கேட்கும் ரோசிக்கு இவ்வளவு பெரிய பிரச்சிநையா என்று நினைத்தாள் , ரோசி இவளுக்கு டீ  கலப்பதற்குள்
குழந்தைகள்  இருவருக்கும் நூறாயிரம் ஹெல்ப் செய்ய வேண்டியிருந்தது .

மனதில் தன்னுடைய வேலைகளையும் , குழந்தைகளுடன் எரிந்து விழுவதையும் நினைத்து பார்த்தாள் , மனது வேதனைப்  பட்டது , ரோசி
நினைவாகவே வீடு திரும்பினாள் , அவளுடைய பையன் வருண் "அம்மா , நான் இப்போ உன்னோட பேசலாமா இல்லை நீ பிஸியா" என்றான்  .

"அம்மா எப்போதுமே நீ கூப்பிடும்போது பிஸி இல்லை கண்ணா "என்றாள்

வருணுக்கு ஒன்றும் புரியவில்லை , ஆனால் வசந்திக்கு வாழ்க்கை  நன்றாகப்
புரிந்தது.


Thursday, September 11, 2014

புதுமைப்  பெண்

மனதில் ஆயிரம் கனவுகளோ டு  கார்த்திக் , இன்று பெண் பார்க்க போகிறான் , அப்பா அம்மாவை  முழுதாக நம்பி, தனக்கு தகுந்த பெண்ணை தேடியிருப்பர்களே ன நினைத்து 

கார்த்தி இன்ஜினியரிங் முடித்து  யு எஸ்  சென்று எம் எஸ் படித்த பையன் 
கை நிறைய சம்பாதிக்கும் அழகான இளம் வாலிபன் , அவனுக்கு அம்மா அப்பா மீது மிகுந்த  நம்பிக்கை , தன கல்யாண பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருந்தான், 15 நாள் லீவில் ஊரிலிருந்து வந்திருக்கிறான்  பெண் பார்க்க .அப்பா பரசுராமன் ஒரு லீடிங் அட்வோகட், அம்மா வாசுகி ரிடயெரெட் 
பேன்கர் .பெண்ணின் பெயர் ஷக்தி , அவனுக்கு பாரதி மேல் கொள்ளை ப்ரியம் , பெயர் மிகவும் பிடித்திருந்தது , ஆயிரம் கனவுகளுடன் , அப்பா அம்மாவுடன் காரில் ஏறினான் , சக்தியுடன்  பே ஸ்   புக்  இ எ மெயில் எதிலயும் கநெகட்   ஆகவில்லை  அவளை   பிடித்தலோயிழ பேச கூடாது என நினைத்தான் 

எல்லாவற்றையும் யோசித்து கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டு 
வாசல் வந்துவிட்டது , பெண்ணின் அப்பா வரவேற்றார், வீடு மிக அழகாக இருந்தது ,  கார்த்திக் அனைவரோடும் ஆவலாக பேசினான் , பெண் வெளியில் வரவில்லை வாசுகி   பொறுமை இழந்தாள்  ," பெண்ணை வரச்சொல்லுங்கள் என்றாள் . பெண்ணுடைய அம்மா தர்ம சங்கடத்துடன் வெளியில் வந்தாள் , "பெண் பார்ப் பதை வீட்டில் சந்தையை போல வைத்துக்கொள்வதற்கு என் பெண் பிரியப்படவில்லை , இவினி ங் ஏதாவது பப் பில் மீட் செய்யலாம் என்கிறாள் என் பெண்" என்றாள்  , வாசுகிக்  தலை சுற்றியது , கார்த்திக் ஒரு நல்ல வேலையிலிருக்கும் நாகரீகமான  பையன் , அவன்  ஆபீசிலும் ஏகப்பட்ட பார்ட்டிகள் நடக்கும் , அதற்கு போவதுண்டு , ஆனால் ஒரு [பெண்ணுடன் சந்திப்பை எவ்வாறு பப்பில் துவங்குவது , அதுவும் முதல் சந்திப்பு , மிகவும் வருத்தப்பட்டாள்  , "சேரி மாமி நான் உள்ளே சென்று சக்தியை பார்கிரேன் " என்றாள் சக் தி உள்ளே ஒரு சிறிய ஷா ர்ட்ஸ்  போட்டுக்கொண்டு கம்ப்யு ட்டரில் முழுகி இருந்தாள்  , கார்த் திக்   அம்மாவின் வருகையை கண்டு கொள்ளா தது போல இருந்தாள்  , வாசுகிக்கு அவமானமாய் போய் விட்டது  , "கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தா ல் நன்றாக இருக்கும்மா" என்று சொன்னதற்கு , "ஆண்டி , நாம பிரக்டிகல் ஆக பேசுவோம் , நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்க போவதில்லை , கார்த்திக்கை அழைச்சுண்டு  போய்பப்பில் கொஞ்சம்  ஊற்றி கொடுத்தா ல் அவன் மனதில் என்ன இருக்கும் என்று தெரியும் , நான் கொஞ்சம் சாப்பிட்டால் என் மனதில் இருப்பதை அவனிடம் சொல்வேன் என்றாள்   , இதை கார்த்திக் அப்பாவிடம் சொன்னால் அவர் மனது எப்படியிருக்கும் என்பதை மிகவும் உணர்ந்த வாசுகி 
வெளியில் சென்று , கார்த்திக்கிடமும் , பரசுராமனிடமும்   "இந்த பெண்நமக்கு ஒத்து வரா து என்றாள் .  

Saturday, September 6, 2014

சுவரோடே சொல்லி அழு 
ஜானகி நிறைய நேரம் நடந்டதுக்கப்புறம் மூச்சு வாங்க கொஞ்சம் நேரம் நின்றாள் பக்கத்தில் எதுத்தவீட்டு  கோகிலா மாதிரி இருந்தது , இவளை பார்த்ததும் அவள் கையசைத்தாள் , ஜானகிக்கு நடப்பதற்கு புது தெம்பு வந்தது ," எங்க போயிட்டு வரேன்னு கேட்டாள்.  , கோகிலாவிற்கும் அழுகை வந்தது  மணி ஆர்டர் பண்ணிட்டு வரேன் மாமி என்றாள் , நானும் கார்த்தாலேருந்து   உங்காத்து   கொல்லைபக்கம் பார்த்துண்டே இருந்தேன் நீங்கள் தென்பட ஂமாட்டேளோன்னு
     உங்களை காணும் , எனக்கும் எங்காத்து  மாமாக்கும் ஒரே சண்டை , இந்த மாசம் எங்களுக்கு ஏகப்பட்ட செலவு ஆனாலும் என் நாத்தனார் ஊர்லேருந்து பணம் கேட்டவுடன் மணி ஆர்டர் பண்ணுவேன்னு  அடம் பிடிக்கிறார்,   நாளைக்கி வைதேஹிக்கு பீஸ் கட்டணும் , நான் என்ன பண்ணறதுன்னே தெரியலை மாமி என்றாள்.ஜானகிக்கு இதை கேட்டவுடன் மிகுந்த  வருத்தம், தனக்குதான் தலை போற பிரச்சனைனா இவளுக்கு அதுக்கு மேல இருக்கே என்று வருத்தம் , அவள் உடனே கோகிலாவிடம் சொன்னாள்  ரொம்ப மூச்சு வாங்கறது கொஞ்சம் உக்கார்ந்து பேசலாமே என்றாள். இருவரும் மாவு மிஷின்   வாசலில் உட்கார்ந்தார்கள் ,ரொம்ப வருத்தமா இருக்கு கோகிலா உன்னை நினைத்தால் என்று சொன்னாள் அவர்கள் இருவருக்கும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது ஆறுதல்  .அது கூட இருவர் வீட்டில் இருப்பவர்களுக்கு  பிடிப்பதில்லை வீட்டு வேலை கேட்டு போய்விடுமோ என்ற பயம் , கோகிலா சொன்னாள் மாமி என்னோட பிரச்சனையை உங்களோட ஷேர் பண்ணிண்டா கொஞ்சம் நிம்மதி தீர்வு கிடைக்காது இருந்தாலும் ஒரு திருப்தி  ஜானகி சிரித்து விட்டு நம்பளால் ஒன்றையும் நம்மாத்திலே மாத்த  முடியாது, ஆனா நாம்ப பேசறது எனக்கும் பிடிச்சிருக்குன்னு   சொன்னாள் "ஏன் மாமி உங்கள் மூஞ்சி வாடியிருக்குன்னு  கேட்டாள் கோகிலா ஜானகிக்கு ஒரே சந்தோஷம் ", "  இவர் ஒரு ஒண்ணா  நம்பர் முசுடுன்னு உனக்கு தெரியும் கார்த்தால அவசரத்துலே தட்டுலே இட்லி போட்டுட்டு தொட்டுக்க ஒண்ணும்  போடாம விட்டுட்டேன் அதற்காக கோச்சுண்டு சாப்பிடாம எழுந்து போய்விட்டார் அவர் ஆபீஸ் கு நடந்து போய் லஞ்ச் கொடுத்துட்டு வந்தேன் அப்போ  கூட என்னை நிமிர்ந்து பார்க்கலை    என்றாள். கோகிலாவிற்கு மிகவும் வருத்தம் "என்ன மாமி இது உங்களை மாதிரி பொறுமை சாலியை பார்க்க முடியாது மாமா ஏன் இப்பிடி 

கோவிசுக்கரார்னு  தெரியலையே " அப்படின்னு இருவரும்  வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் நினைத்தவாறு வேகமாக நடந்தனர் , ஆனால் மனதில் ஒரு தெம்புடன்தங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் பொறுமையாக கேட்டுக்கொள்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்பதை நினைத்து.